விவசாயிகளுக்கு ஓர் நற்செய்தி: யாழில் வெளியாகிறது ‘விவசாயி’ (Photo)

1134

யாழ். மண்ணிலிருந்து ‘விவசாயி’ எனும் மாதாந்த சஞ்சிகையின் ஆரம்ப இதழ் வெளியீட்டு விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை(13) காலை-09.30 மணி முதல் யாழ்ப்பாணப் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

விவசாயி மாதாந்த சஞ்சிகையின் ஆசிரியரும்,’கற்பகவனம்’ வேளாண்மை நிறுவன நிர்வாக இயக்குநருமான சிவராஜா அனுராஜ் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த விழாவில் ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

விவசாயம் தொடர்பான தகவல்கள் அடங்கிய மாதாந்த சஞ்சிகையாக ‘விவசாயி’ சஞ்சிகை யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டு வெளியாகவுள்ளமை விவசாயிகள், ஆர்வலர்கள் அனைவருக்குமான ஓர் நற்செய்தி என்றால் அது மிகையாகாது.

“விவசாயி” சஞ்சிகை தடையின்றி வெளிவர எம்மாலான ஒத்துழைப்புக்களை வழங்குவோம்.