வாரத்தில் எத்தனை நாள்கள் அசைவ உணவுகள் சாப்பிடலாம்?

660

“வாரத்தில் மூன்று நாள்கள் மீன் சாப்பிடலாம். பொரித்துச் சாப்பிடக் கூடாது. மீனைக் குழம்பாக வைத்துதான் சாப்பிடவேண்டும். கடல் மீன்களைவிட, ஏரி குளங்களில் கிடைக்கிற மீன் இதயத்துக்கும் மூளைக்கும் நல்லது. பிராய்லர் சிக்கனை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நாட்டுக்கோழி என்றால் வாரத்தில் ஒருநாள் சாப்பிடலாம். நாட்டுக்கோழியையும் தோலை உரித்துவிட்டுத்தான் பயன்படுத்த வேண்டும்.

முட்டையைப் பொறுத்தவரை ‘வெள்ளைக்கரு மட்டும்’ என்றால் தினமும் ஒன்று சாப்பிடலாம். முழு முட்டை என்றால் வாரத்துக்கு இரண்டு முட்டை என்ற கணக்கில் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு வாரத்தில் ஐந்து நாள்கள் முழு முட்டை கொடுக்கலாம். அசைவ உணவுகள் சாப்பிடும் நாள்களில் பால், பருப்பு போன்றவற்றைத் தவிர்த்துவிடுவது நல்லது.”

ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ்-