சுன்னாகத்தில் வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு (Video)

266

ஆளுநர் சுயேட்சை நிதியிலிருந்து வடக்கு மாகாண முதலமைச்சரின் அமைச்சிற்கு மாற்றப்பட்ட வாழ்வாதாரத் திட்டத்துக்கமைய யாழ்.உடுவில் அரசகால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட ப்குதிகளைச் சேர்ந்த வறுமைக்கோட்டுக்குட்பட்ட ஐந்து குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வு இன்று சனிக்கிழமை(12) முற்பகல்- 09.30 மணி முதல் சுன்னாகத்தில் அமைந்துள்ள மேற்படி அலுவலக முன்றலில் உடுவில் கால்நடை வைத்திய அதிகாரி எஸ். சி. விமலகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகத்தர் க. கேசவன் விருந்தினராகக் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தார்.

குறித்த நிகழ்வில் மாற்றுத் திறனாளியொருவருக்கு ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான பசுமாடு மற்றும் கன்றும், வேறொரு குடும்பமொன்றுக்கு 45 ஆயிரம் ரூபா பெறுமதியான மூன்று மறி ஆடுகளும்,மூன்று குடும்பங்களுக்குத் தலா-35 ஆயிரம் ரூபா பெறுமதியான கோழிக் குஞ்சுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

அதில் இரண்டு குடும்பங்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களுக்கு கோழிக்கூடுகளும் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

(எஸ்.ரவி-)