யாழில் ஆழ்கடல் தொழிலுக்கான கன்னிப் பயணத்தை ஆரம்பித்த படகுகள் (Photos)

242

யாழ். வடமராட்சி கிழக்கு ஆழியவளை மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு கோடி ரூபா பெறுமதியான பல நாள் படகுகள் ஆழ்கடல் தொழிலுக்கான கன்னிப் பயணத்தை ஆரம்பித்துள்ளன.

இதற்கான சம்பிரதாய நிகழ்வு நேற்று முன்தினம் வியாழக்கிழமை(10) முற்பகல் -10 மணியளவில் ஆழியவளைக் கடற்பகுதியில் இடம்பெற்றது.

ஆரம்ப நிகழ்வில் மருதங்கேணி பிரதேச செயலர் க. கனகேஸ்வரன், பருத்தித்துறைப் பிரதேச சபை உறுப்பினர் வே. பிரசாந்தன், கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினர்கள், மீனவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வடமராட்சி கிழக்கு மீனவர்களின் நன்மை கருதி தெரிவு செய்யப்பட்ட குறித்த பகுதியைச் சேர்ந்த மூன்று கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு தலா ஒரு கோடி ரூபா பெறுமதியான பலநாள் படகுகளை சுவிஸ் நாட்டின் SAH நிறுவனம் வழங்க முன்வந்துள்ளது. இதற்கமைய குறித்த பலநாள் படகுகள் நவீன வசதிகளைக் கொண்டமைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

(ஆதவன்-)