வேதனைத் தூவானம் 

பொழுதுகள் புலர்கின்றன
நாட்கள் நகர்கின்றன
நமது நம்பிக்கைகளில்
நகர்வுகள் எதுவுமில்லை

இல்லை’ எனும் வார்த்தை
இங்கு எல்லோர்க்கும் சொந்தம்
போர் ஓய்ந்தது போர் தந்த வடுக்கள்
இன்னமும் ஓயவில்லை

ஏக்கங்கள் எம் வாழ்வில்
என்றும் குட்டிபோடும்
குடிசைகள் என்றுமெம்
நிரந்தர வசிப்பிடங்கள்

புனர்வாழ்வு எனும் பெயரில்
நிதம் புதைகுழியில்
அகதிகள் போர்வையில்
அரைகுறை நிம்மதியும்
அந்தர அழிவுதனில்

வேடம் வெளுக்கிறது
வெறுவாய்கள் மெய்க்கிறது
பாழ்பட்ட சனமெல்லாம்
பட்டினியால் சாகிறது
வேதனைத் துவானமெங்கும்
விடாமல் பொழிகிறது

(கவியாக்கம்:- குறிஞ்சிக்கவி-)