ஏய் ஸ்டெர்லைட்டே நீயும் இயமன் தான்!

ஐம்பூதங்களும்
ஐம்புலன்களிற்கு
இயமனாக
புதிய அவதாரம் ஸ்டெர்லைட்..!

தூத்துக்குடியில்

எம் தமிழ்க் குடி
குடிசையில் வாழ்ந்தாலும்
குதூகலமாக வாழ்ந்தார்கள்

ஏய் ஸ்டெர்லைட்டே
நீயும் இயமன் தான்…!

நீர் நிறம் மாறியது
நிலம் மலமாகியது
தீ பெருந்தீயாகியது
காற்று மூச்சுக் காற்றை நசுக்கியது
ஆகாயம் புகைமூட்டமாகியது
ஐம் பூதங்களும்
ஐம் புலன்களிற்கு
இயமனாக
புதிய அவதாரம் ஸ்டெர்லைட்…!!!

நீதிக்காக போராடியவர்களுக்கு
அநீதியே தீர்வு…!

ஏய் காவல் துறையே
என் இனம் மீது
உன் தோட்டாக்கள் குறி தப்பியதில்லை…!

ஏய் ஹிந்தியமே
உன் பசிக்கு பலியான
அந்த அக்காவும் அண்ணாவும்
மூச்சுப் போகும் தருணத்தில் கூட
உங்கள் முன் மண்டியிட்டிருக்கமாட்டார்கள்
நெஞ்சுயர்த்தி
ஸ்டெர்லைட் இயமனிற்கு எதிராக
உரமூட்டியுள்ளார்கள்
அந்த மாவீரர்கள் புதைந்த இடத்தில்
ஆயிரமாயிரம் புரட்சியாளர்கள் முளைப்பார்கள்
உங்களைத் துளைப்பார்கள்…!!!

தமிழா விழித்திடு
உலகமே உனக்கு எதிரி
துரோகியை களைவோம்
எதிரி தானாக வீழ்வான்…!!!

{தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுக்கு ஈழத்துக் கவிஞனின் ஒரு உணர்வுபூர்வ சமர்ப்பணம்}

(ஈழத்திலிருந்து நவா,
பட்டதாரி மாணவன்.)