தந்தையைப் போற்றுவோம்

தாயின் அன்புக்கு நிகரானது
தந்தையின் பாசம்
பத்துமாதம் கருவில் சுமந்து -எம்மைப்
பாலூட்டித் தாலாட்டி வளர்ப்பவள்
தாய் என்றால்
நாளெல்லாம் எம்மை
நெஞ்சில் சுமக்கும் உத்தமர் தந்தை

அவரின்றேல் நாங்களில்லை
அவர் தியாகத்துக்கு என்றுமே எல்லையில்லை
தந்தையைப் போற்றுவோம்
தரணியெங்கும் தந்தையர்
பெருமையை என்றென்றும் பறைசாற்றுவோம்

{உலகம் முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை(17)தந்தையர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு இந்தக் கவிதை வெளியிடப்படுகின்றது}

கவியாக்கம்:-செ.ரவிசாந்-(குறிஞ்சிக்கவி)