வரம் தந்து காத்திடையா சோதிவிநாயகா!

கொடியேற்றம் காணும் குப்பிளான் உறை சோதிவிநாயகனே!- உம்
பாதம் பணிந்தேற்றுகின்றோம்
சீரிய கல்வி, செல்வமும் சிறக்க
சிரம் தாழ்த்திப் பணிந்தேற்றுகின்றோம்
சித்திகள் பல தந்து காத்திடையா!
சொற்பதங் கடந்தவனே!எங்கள் சோதிவிநாயகனே!
மகா செந்திநாதையர் பூசித்த
மாசில்லாத் தூயவனே!
விண் முட்டும் இராஜகோபுரத் திருப்பணியை
இனிதே நிறைவேற்றிய
உன் அற்புத மகிமையை என்னவென்பேன்?
உன் புகழைப் பாடச் சொற்களைத் தேடுகின்றேன்!
கொடியேறி வந்திடையா!- எம்
வாழ்வில் புதுவசந்தங்கள் வீசிட
வரம் தந்து காத்திடையா!

கவியாக்கம்:- செ. ரவிசாந்-

(இன்றைய தினம்(01-07-2018)யாழ்.குப்பிளான் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. இதனை முன்னிட்டு இக்கவிதை வெளியாகிறது)