பிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணைப் பரிசோதனை வெற்றி (Photo)

830

200 கிலோ வெடிப் பொருட்களுடன் பாய்ந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்ட பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையின் பரிசோதனை வெற்றியடைந்துள்ளது.இன்று(16) இந்தியாவின் ஒரிசா மாநிலத்திலுள்ள சாந்திப்பூர் கடல் பகுதியில் முற்பகல்- 10.15 மணிக்கு பிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

இந்தியா- ரஷ்யா சேர்ந்து உருவாக்கிய பிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை சுமார் இரண்டாயிரம் கிலோ எடை கொண்டதாகும். இது சுமார் 200 கிலோ வெடிப்பொருட்களுடன் 290 கிலோ மீற்றர் தூரம் வரை தரைக்கு மேல் பறந்து சென்று தாக்கும் வல்லமை கொண்டது.

ஏவப்பட்டதும் முதல்கட்டமாக ஒலியைவிட இரண்டு மடங்கு வேகமாக 14 கிலோ மீற்றர் உயரம் வரை சீறிப் பாயும் ஆற்றல்கொண்ட இந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட பாதையில் செல்லும்போது தேவைப்பட்டால் இலக்கிலிருந்து 20 கிலோ மீற்றர் தூரத்தில் இலக்கின் போக்கு ஏற்பட மாறித் தாக்கும்.

இதேவேளை, கடந்த 2001, 2003 ஆம் ஆண்டுகளில் குறித்த ஏவுகணைச் சோதனை மேற்கொள்ளப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.