ஆட்டோ டிரைவருக்கு கிடைத்த உயர்பதவி (Photo)

306

இந்தியாவின் மகாராஷ்டிராவில் ஆட்டோ டிரைவர் ஒருவர் மேயர் தேர்தலில் வெற்றி பெற்று மாநகராட்சி மேயராகப் பொறுப்பேற்கவுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் பிம்ப்ரி சிஞ்ச்வாட் மாநகராட்சியில் மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜக சார்பில் ஆட்டோ டிரைவரான ராகுல் ஜாதவ் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சி சார்பில் வினோத் நாதே போட்டியிட்டார்.

இத்தேர்தலின் முடிவில் ராகுல் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வினோத் நாதேவை 47 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இது குறித்து ராகுல் கருத்துத் தெரிவிக்கையில்,

நான் ஒரு ஆட்டோ டிரைவர் எனக்கு மக்களின் பிரச்சினை அனைத்தும் தெரியும். எனவே அவர்களின் நலனுக்காகப் பாடுபடுவேன். நகர வளர்ச்சிக்காக கடுமையாக உழைப்பேன் என்றார்.