உடல்நிலையில் முன்னேற்றம்: வீடு திரும்பினார் விஜயகாந்த்

361

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து வைத்தியசாலையிலிருந்து அவர் வீடு திரும்பியுள்ளார் .

கடந்த சில தினங்களுக்கு முன் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நிலையில் சிறிய அளவில் நலிவு ஏற்பட்டது. அவருக்கு உடலில் ஏற்கனவே இருந்த பிரச்சினை காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

தொடர்ந்து உடலில் பிரச்சனை இருந்ததால் மூன்று முறை வெளிநாடு சென்றும் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் தற்போது சென்னை மணப்பாக்கத்திலுள்ள தனியார் வைத்தியசாலையில் விஜயகாந்த்துக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அவருக்கு மூச்சு விடுவதில் பிரச்சினை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. திடீரென மூச்சு விடுவதில் பிரச்சினை ஏற்பட்டமையால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். இரண்டு தினங்களாகத் தீவிர சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்த நிலையில் தற்போது தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று அதிகாலை(02) தீவிர சிகிச்சைப்பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் சென்னை மணப்பாக்கம் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை முடிந்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வீடு திரும்பியுள்ளார். அவரது உடல் நல்ல நிலையில் காணப்படுவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.