தருணம் இது உன் அருளைத் தா நல்லூரா!

நல்லூரிலே நின்றாடிடும் வடிவேலனே முருகா
எல்லோரதும் வினை தீரவே விரைந்தோடி வா முருகா

சரவணப் பொய்கையில் உதித்தவனே
அரவணைத் தாண்டிடும் அற்புதனே
ஆரமுதே எங்கள் அழகனே வா

(நல்லூரிலே நின்றாடிடும்……)

வள்ளி மாணாளனே வாருமையா
வருந்திடும் எங்களைப் பாருமையா
அருள் மழை தாருமையா

(நல்லூரிலே நின்றாடிடும்……)

கருணைக் கடலே கதிர் வேலா
அருண கிரியின் குரு நாதா
தருணம் இது உன் அருளைத் தா

(நல்லூரிலே நின்றாடிடும்……)

தேரடிச் சித்தர்கள் போற்றிய வேல்
தேவருந் தேடிடுந் திவ்ய வேல்
பேரிடர் களையிங்கு களைகின்ற வேல்

(நல்லூரிலே நின்றாடிடும்……)

பாவாக்கம்:- கவிமணி க. ஆனந்தராசா ( அன்னைதாஸன் )
யாழ்ப்பாணம்.