வைரமுத்து அப்படிப்பட்டவர் தான்!: சின்மயி குற்றச்சாட்டை உறுதிசெய்த பிரபல இசையமைப்பாளர்

148

சின்மயி புகாரை நம்புவதாகவும், வைரமுத்து மீது இது போன்று பலர் பாலியல் குற்றச்சாட்டுக்களை தன்னிடம் கூறியுள்ளனர் எனவும் பிரபல பெண் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரிஹானா தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மானின் மூத்த சகோதிரியும், இசையமைப்பாளரான ஏ.ஆர். ரிஹானா தனியார் செய்தி தொலைக்காட்சியொன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார். அவரிடம், me too விவகாரம் குறித்து பேட்டியாளர் கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய அவர் me too பரப்புரைக்கு ஆதரவு தருகின்றேன். பாலியல் துன்புறுத்தல்களை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.

சுச்சி லீக்ஸ் வந்த போது அந்தப் பெண்ணின் தைரியம் பிடித்திருந்தது. ஸ்ரீரெட்டியின் நிலைமை வருத்தமளித்தது.

பாலியல் துன்புறுத்தல் நடந்த போதே சின்மயி அதை பற்றி பேசியிருக்க வேண்டும். தற்போது பேசுவதால் அது திசை திருப்ப வாய்ப்புள்ளது. வைரமுத்து மீது சின்மயியின் குற்றச்சாட்டுக்களை நான் நம்புகிறேன்.

வைரமுத்து தமிழுக்கான அடையாளம்

வைரமுத்து தமிழுக்கான அடையாளம் தான். ஆனால், இதுபோன்ற விடயங்களை முளையிலேயே கிள்ளிவிட வேண்டும்.

அதை விட்டுவிட்டு வைரமுத்து உடன் சுமூகமான உறவு ஏற்பட்ட பின்னர் சின்மயி குற்றச்சாட்டு கூறுவது ஏற்புடையது அல்ல.

அதேசமயம் வைரமுத்துவை மட்டும் குறிப்பிட்டு அவரைக் காலி பண்ணும் நோக்கத்தோடு ஊடகங்கள் செய்தி வெளியிடுவதால் மற்றவர்கள் செய்யும் தவறுகள் வெளிச்சத்திற்கு வரமாலேயே போய்விடலாம் எனவும் ஏ.ஆர். ரிஹானா மேற்கண்ட நேர்காணலில் மேலும் கூறியுள்ளார்.