இலங்கையில் திணறும் இங்கிலாந்து அணி!

208

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 366 ரன்களை குவித்துள்ளது.

இலங்கைக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 ஒருநாள், ஒரு டி20, 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றது.


இலங்கையின் டிக்வெல்லா 95, சமரவிக்ரமா 54, தினேஷ் சாண்டிமல் 80, குசல் மெண்டிஸ் 56 என வரிசையாக சிறப்பாக விளையாடி ரன்களை குவிக்க 50 ஓவரில் 6 விக்கெட்டுக்களை இழந்து 366 ரன்களை இலங்கை குவித்துள்ளது.

நம்பர்-1 அணி

ஒருநாள் போட்டியின் தர வரிசையில் இங்கிலாந்து அணி நம்பர் -1 இடத்திலுள்ளது. இதனைக் காப்பாற்றிக் கொள்ளும் வகையில் சிறப்பாக விளையாடி 3-0 என ஏற்கனவே தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந் நிலையில் ஐந்தாவது ஒருநாள் போட்டி கொழும்பில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்தது.

இருப்பினும் இரண்டாவதாக களமிறங்கியுள்ள இங்கிலாந்து அணி 7 ஓவரில் 3 விக்கெட் வீழ்ந்து 28 ரன்கள் மட்டும் எடுத்துத் திணறி வருகின்றது.

முதல்-4 ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 3-0 என முன்னிலை வகிக்கின்றது. முதல் போட்டி மழை காரணமாக முடிவு கிடைக்கவில்லை.