தாயானார் சானியா மிர்சா (Photos)

214

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் சோயிப் மாலிக் மற்றும் இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமாகவிருப்பதாக ஷோயிப் மாலிக் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சர்வதேச டென்னிஸ் அரங்கில் இந்தியாவைப் பெருமைப்படுத்திய வீராங்கனை சானியா மிர்சா. இவர் பெண்கள் இரட்டையர் பிரிவில் ஆஸி. ஓபன் (2016), விம்பிள்டன் (2015), யூ.எஸ்., ஓபன் (2015) சாம்பியன் பட்டமும், கலப்பு இரட்டையர் பிரிவில் ஆஸி., ஓபன் (2009), பிரஞ்சு ஓபன் (2012), யூ.எஸ்., ஓபன் (2014) சாம்பியன் பட்டமும், வென்று அசத்தியுள்ளார்.

சர்வதேச டென்னிஸ் அரங்கில் இந்தியாவுக்குப் பெருமை சேர்ந்த இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கைத் திருமணம் செய்து கொண்டார். பாகிஸ்தான் வீரரைத் திருமணம் செய்து கொண்ட போதும் தொடர்ந்தும் இந்தியாவுக்காக விளையாடி வருகிறார்.

இவர் விரைவில் தாயாகவுள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் ஏழு மாத கர்ப்பமாகவிருந்த போதும் சானியா மிர்சா டென்னிஸ் விளையாடியிருந்தார்.

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சானியா மிர்சா மற்றும் ஷோயிப் மாலிக் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்தத் தகவலை ஷோயிப் மாலிக் டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து அவருக்கு விளையாட்டுத் துறை, திரையுலகம் எனப் பல்வேறு துறைசார்ந்த பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.