தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவரா?: சென்னையில் பரபரப்பு! (Photo)

59

அடுத்த முதல்வர் விஜய் என்பதனை குறிக்கும் விதமாக சென்னை நகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் படம் சர்கார்.கதை பிரச்சினையைக் கடந்து தீபாவளிக்கு வெளியாகவுள்ளமையால் விஜய் ரசிகர்கள் பேனர்கள் வைத்துக் கொண்டாட்டங்களில் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் சென்னையிலுள்ள இரசிகர்கள் இன்று சென்னை முழுவதும் முக்கிய இடங்களில் வித்தியாசமான சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

அந்த சுவரொட்டியில் தமிழகத்தின் முதல்வராக இதுவரை இருந்தவர்களின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளது.

“எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கும்” என்ற வாசகத்துடன் அச்சடிக்கப்பட்டுள்ள அந்த போஸ்டரில் கைகளை மூடி உயர்த்திக் காட்டுவது போன்ற நடிகர் விஜயின் புகைப்படத்துடன் ஒரு விரல் புரட்சியை குறிக்கும் விதமாக மை தீட்டப்பட்ட விரலுமுள்ளது.

நாளைய முதல்வர் விஜய் என்பதைக் குறிப்பால் உணர்த்தும் வகையிலுள்ள குறித்த சுவரொட்டிகள் சென்னையின் முக்கிய பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.