யாழ். ஏழாலையில் கோர விபத்து: சம்பவ இடத்திலேயே 20 வயது இளைஞர் உயிரிழப்பு

559

யாழ்.ஏழாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி 20 வயது இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் தீபாவளி தினமான நேற்றுச் செவ்வாய்க்கிழமை(06) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

மேற்படி விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மோட்டார்ச் சைக்கிளை அதிவேகமாகச் செலுத்திச் சென்ற போது குறித்த மோட்டார்ச் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து யாழ்.ஏழாலையிலுள்ள வலி. தெற்குப் பிரதேச சபையின் உப அலுவலகத்திற்கு அருகிலுள்ள மதிலுடன் கடுமையாக மோதுண்டது.

இந்தச் சம்பவத்தில் மோட்டார்ச் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சேன்ற இளைஞர் உயிரிழந்ததுடன் மோட்டார்ச் சைக்கிளைச் சென்றவர் படுகாயமடைந்தார்.

குறித்த சம்பவத்தில் யாழ்.ஏழாலை வடக்கு உசத்தியோடை மயான வீதியைச் சேர்ந்த செல்வராசா நிரோசன் (வயது-20) என்ற இளைஞனே பரிதாபகரமாக உயிரிழந்தவராவர்.

இதேவேளை, சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

(தமிழின் தோழன்-)