திருப்பதியில் தீபாவளி நாளில் மாத்திரம் இவ்வளவு தொகை காணிக்கையா?

303

தீபாவளிப் பெருநாளை முன்னிட்டுசெவ்வாய்க்கிழமை(06-11-2018)
திருப்பதியில் பக்தர்கள் ரூ.3.13 கோடி காணிக்கையாக செலுத்தியிருக்கின்றனர்.

தீபாவளி விடுமுறையை ஒட்டி நேற்று முன்தினம் ஏராளமான பக்தர்கள் திருப்பதி கோயிலை நோக்கிப் படையெடுத்தனர். இதனால், கோயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

கோயிலை சுற்றியுள்ள லாட்ஜுகளிலும், ஹோட்டல்களிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டன. இந்நிலையில் பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து ஏழுமலையானைத் தரிசித்தனர்.

இதேவேளை, தீபாவளி நாளில் மாத்திரம் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை 3.13 ரூபா கோடி என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.