யாழ். நல்லூர் கந்தன் கோயிலில் பக்திபூர்வமாக ஆரம்பமான கந்த சஷ்டி (Photos)

94

அழகுத் தெய்வமான முருகப் பெருமானைக் குறித்து அனுஷ்டிக்
கப்படும் முக்கிய விரதங்களில் ஒன்றான கந்த சஷ்டி விரதம் இன்றைய தினம்(08-11.2018)ஆரம்பாகியுள்ளது.

இதனை முன்னிட்டு யாழ்.குடாநாட்டிலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயங்களான நல்லூர்க் கந்தசுவாமி கோயில், தொண்டமானாறு செல்வச் சந்நிதி கோயில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் உட்பட முருகன் ஆலயங்களிலும், விநாயகர் ஆலயங்களிலும், ஏனைய பல ஆலயங்களிலும் இன்றைய தினம் விசேட அபிஷேக பூசைகளுடன் கந்த சஷ்டி விரத காலம் ஆரம்பமானது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று பிற்பகல் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றதுடன் முருகப் பெருமான் வீதி வலம் வந்தும் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இவ்வாலயத்தில் இடம்பெற்ற கந்த சஷ்டி விரத வழிபாடுகளில் அடை மழைக்கு மத்தியிலும் பல எண்ணிக்கையான அடியவர்கள் பக்திபூர்வமாகக் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

(எஸ்.ரவி-)