வாயில் பட்டாசு வெடித்த இளைஞன்: உயிருக்கு போராடும் சிறுமி

48

உத்தரப் பிரதேசத்தில் மூன்று வயதுச் சிறுமியொருவரின் வாயில் இளைஞர் பட்டாசு வெடித்ததில் சிறுமி உயிருக்கு போராடி வருகிறார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் மூன்று வயது குழந்தை தீபாவளி பண்டிகை அன்று சாலையில் பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருந்தது.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஹர்பால் என்ற இளைஞர் சிறுமியை அழைத்து அவரின் வாயில் பட்டாசு வைத்து வெடித்துள்ளார். இதனால் சிறுமியின் வாய் கிழிந்தது.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிறுமிக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

அவரின் வாயில் 50 இற்கும் மேற்பட்ட தையல்கள் போட்டுள்ளனர். சிறுமியின் நிலை இன்னும் கவலைக்கிடமாகவே உள்ளதாம்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார் சிறுமியின் வாயில் பட்டாசு வெடித்த இளைஞரைத தேடி வருகின்றனர்.