ஐந்து நிமிடத்தில் 20,000 கோடி விற்பனை: ஆன்லைன் பிஸ்னஸ்சில் புதிய சாதனை (Photo)

93

ஐந்து நிமிடத்தில் 20,000 ரூபா கோடிக்கு விற்பனை செய்து ஆன்லைன் பிஸ்னஸ்சில் புதிய சாதனை படைத்துள்ளார் அலிபாபா நிறுவனத் தலைவர் ஜாக் மா.

சீனாவைச் சேர்ந்த அலிபாபா ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா. சீனாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் இந்நிறுவனம் முதல் இடத்தை வகிக்கிறது. அலிபாபா நிறுவனம் எப்போதும் 11 ஆம் மாதத்தில் வரும் 11 ஆம் திகதியன்று பல்வேறு சலுகைகளை வழங்குவது வழக்கம்.

இந்த சலுகை டபுள் 11 என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் நேற்று முன்தினமும் சலுகைகள் வழங்கப்பட்டது. இந்த விற்பனை ஆரம்பித்ததும் சீனா முழுக்க உள்ள பல கோடி மக்கள் பொருட்களை வாங்கிக் குவித்தனர்.

இதனால், விற்பனை ஆரம்பமாகிய முதல் ஐந்து நிமிடத்திலேயே 20,000 ரூபா கோடி இலாபம் கிடைத்தது.

அடுத்த ஒரு மணி நேரத்தில் 70,000 ரூபா கோடி வரை விற்பனை அள்ளியது.

கடந்த வருடம் இதேபோன்ற விற்பனையின் போது அலிபாபா நிறுவனம் ரூ.1.8 லட்சம் கோடி வரை வருமானம் ஈட்டியது. இம்முறை இதனை விடப் பன்மடங்கு அதிக இலாபம் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்ப்பார்ப்பிற்கு ஏற்றவாறே 30 பில்லியனை 24 மணி நேரத்தில் சம்பாதித்துள்ளது.

இந்த விற்பனையின் போது ஆப்பிள் மற்றும் சியோமி நிறுவனப் பொருட்கள் அதிகளவில் விற்பனையாகின என்ற கூடுதல் தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.