யாழ். வலிகாமத்தில் கோவா செய்கையில் விவசாயிகள் ஆர்வம் (Video)

248

யாழ்.வலிகாமம் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோவாப் பயிர்ச் செய்கையில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குறிப்பாக வலிகாமத்தில் புன்னாலைக்கட்டுவன்,குப்பிழான், ஏழாலை, குரும்பசிட்டி, வயாவிளான், கட்டுவன், தெல்லிப்பழை, அளவெட்டி, சுன்னாகம், ஊரெழு, உரும்பிராய், அச்செழு, இணுவில், கோண்டாவில், நீர்வேலி, இருபாலை, சிறுப்பிட்டி, கோப்பாய், புத்தூர், அச்சுவேலி, நவக்கிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப் பகுதிகளில் கோவா பயிரிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் காலநிலை காரணமாக கோவா பயிர்ச் செய்கை பாதிக்கப்பட்ட போதும் இந்த வருடம் அவ்வாறான பாதிப்புக்கள் குறைவாகவுள்ளதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

{செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:- செ.ரவிசாந்-}