யாழ். ஏழாலை புனித இசிதோர் றோ. க. த. க பாடசாலையின் பரிசளிப்பு விழா நாளை

67

ஏழாலை புனித இசிதோர் றோ.க.த.க பாடசாலையின் வருடாந்தப் பரிசளிப்பு விழா நாளை திங்கட்கிழமை(19) பிற்பகல்- 01.30 மணி முதல் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த விழாவில் வலிகாமம் கல்வி வலய முகாமைத்துவ பிரதிக் கல்விப் பணிப்பாளர் சி.மதியழகன் பிரதம விருந்தினராகவும், உடுவில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் த. மாதவன் சிறப்பு விருந்தினராகவும், கமநல அபிவிருத்தித் திணைக்கள ஓய்வுநிலை பதவிநிலை உத்தியோகத்தர் சு.வேலாயுதபிள்ளை கெளரவ விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை,இந்த விழாவில் ஆர்வலர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு மேற்படி பாடசாலை சமூகம் கேட்டுள்ளது.

(எஸ்.ரவி-)