பேஸ்புக்கில் தற்போது பங்காளிச்சண்டை போல முதலீட்டாளர்கள் மார்க்கை இரட்டைப் பதவியில் ஏதேனும் ஒன்றிலிருந்து விலக வேண்டும் என கடும் நெருக்கடி கொடுத்துக் கொண்டிக்கும் நிலையில் பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் மடமடவென சரிவைச் சந்தித்துள்ளது.
இந் நிலையில் பேஸ்புக்கில் யுவர் டைம் ஆன் பேஸ்புக் என்ற பணியை அந் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
இதன் மூலம் பயனாளிகள் தாம் எவ்வளவு நேரம் பேஸ்புக்கை பயன் படுத்தியுள்ளோம்? என்பதை அறிந்துகொள்ளலாம்.
பேஸ்புக்கைப் பயன்படுத்தும் நேரத்தை இதில் செட் செய்துகொள்ளும் வசதியும் உள்ளமையால் பயனாளர்களுக்கு உபயோகமானதாகவிருக்கும் எனவும் நம்பப்படுகின்றது.