இயற்கை விவசாயம்: யாழில் நாளை முக்கிய கலந்துரையாடல் (Video)

108

சமூக விஞ்ஞான படிப்பு வட்டத்தினரின் ஏற்பாட்டில் “சமூக பொருளாதார அரசியல் பின்னணியில் இயற்கை விவசாயம்” எனும் தொனிப் பொருளிலான கருத்துரையும் கலந்துரையாடலும் நாளை வியாழக்கிழமை(22-11-2018) பிற்பகல்-04 மணி முதல் யாழ்.கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இடம்பெறவுள்ள குறித்த நிகழ்வில் இயற்கை வழி இயக்கத்தின் முக்கிய செயற்பாட்டாளர் வைத்திய கலாநிதி நடராஜா பிரபு பிரதான கருத்துரையாற்றவுள்ளதாக சமூகச் செயற்பாட்டாளர் ச.தனுஜன் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இயற்கை வழிச் செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு பயனடையுமாறு சமூக விஞ்ஞான படிப்பு வட்டம் அழைத்து நிற்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

{(செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:- செ.ரவிசாந்-)}