செவ்வாய்க் கிரகத்தில் சாய்வாக நிறுத்தப்பட்ட நாசா விண்கலம்! (Photo)

653

15 டிகிரி கோணம் வரை சாயக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட விண்கலம் தற்போது செவ்வாய்க் கிரகத்தின் புழுதியும்,மணலும் படர்ந்த ஹோலோ என்ற நிலப்பரப்பில் 4 டிகிரி சாய்வாக நிறுத்தப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

இதனால்,இன்சைட்டிலுள்ள நில அதிர்வு மற்றும் வெப்பநிலையை அறியும் சென்சார்கள் சரியாக வேலை செய்யும் என நம்புவதாகவும் நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

நாசா அனுப்பிய இன்சைட் செயற்கைக் கோள் செவ்வாய்க் கிரகத்தில் சாய்வாகத் தரையில் அமர்ந்திருக்கின்றது என நாசா தெரிவித்துள்ளது.

கடந்த-1976 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா செவ்வாய்க் கிரகம் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கின்றது. பல விண்கலங்களையும் செவ்வாய்க்கு அனுப்பி ஆய்வு மேற்கொண்டிருக்கிறது.

அந்த வகையில் நாசாவின் ஒன்பதாவது செவ்வாய்க் கிரக ஆராய்ச்சி விண்கலமான இன்சைட் கடந்த நவம்பர்- 27ஆம் திகதி செவ்வாய்க் கிரகத்தை அடைந்தது. இது செவ்வாய்க் கிரகத்தின் நிலப்பரப்பை ஆழமாக ஆய்வு செய்யும் நோக்கில் அனுப்பட்டது.

15 டிகிரி கோணம் வரை சாயக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலம் தற்போது செவ்வாய்க் கிரகத்தின் புழுதியும், மணலும் படர்ந்த ஹோலோ என்ற நிலப்பரப்பில் நான்கு டிகிரி சாய்வாக அமர்ந்திருக்கின்றது என நாசா தெரிவித்துள்ளது.

இதனால்,இன்சைட்டிலுள்ள நில அதிர்வு மற்றும் வெப்பநிலையை அறியும் சென்சார்கள் சரியாக வேலை செய்யும் என நம்புவதாகவும் நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.