உயிர்காக்கும் உன்னத பணியில் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம்! (Photos)

151

யாழ்.இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் குருதிக் கொடை முகாம் நேற்று முன்தினம் சனிக்கிழமை(01-12-2018) காலை-09.30 மணி முதல் பிற்பகல்-02.30 மணி வரை இளவாலை கலைமகள் படிப்பகத்தில் இடம்பெற்றது.

இந்தக் குருதிக் கொடை முகாமில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நடமாடும் இரத்த வங்கிப் பிரிவினர் நேரடியாக கலந்து கொண்டு இரத்தம் பெற்றுக் கொண்டனர்.

மேற்படி குருதிக் கொடை முகாமில் இரண்டு யுவதிகள் மற்றும் இளைஞர்கள் என இருபத்தாறு பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்தம் வழங்கியதாகத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி ம.பிரதீபன் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

இதேவேளை,இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் 12 ஆவது தடவையாக குறித்த குருதிக் கொடை முகாமை ஏற்பாடு செய்து நடாத்தியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

{செய்தித் தொகுப்பு:-செ-ரவிசாந்-}