யாழ். தொண்டைமானாறில் இளைஞர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி முகாம்: நாளை ஆரம்பம்

214

வாழும் கலை அமைப்பின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட இளைஞர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி முகாம் நாளை-04 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை யாழ்.தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமம் மற்றும் அடியார் மடம் என்பவற்றில் இரு பிரிவுகளாக நடைபெறவுள்ளது.

நாளைய உலகிற்கு சக்திவாய்ந்த இளைஞர்களை உருவாக்கும் பொருட்டு இடம்பெறவுள்ள இந்தத் தலைமைத்துவப் பயிற்சி முகாமில் யோகா, தியானம், பிராணாயாமம், சுதர்சனக் கிரியா போன்ற பயிற்சிகள் கற்றுத் தரப்படும்.

இந்தப் பயிற்சி முகாமில் 18 வயது முதல் 35 வயது வரையான இளைஞர், யுவதிகள் இணைந்து கொண்டு பயன்பெற முடியும்.

குறித்த பயிற்சி முகாமில் இணைந்து கொள்ள விரும்புபவர்கள் எட்டுத் தினங்கள் தொடர்ந்தும் தங்கியிருந்து பயிற்சி பெற வேண்டும். பயிற்சி நெறியின் நிறைவில் பெறுமதியான சான்றிதழ் வழங்கப்படும்.

மேற்படி பயிற்சி நெறிக்கான நேர்முகத் தேர்வு நாளை செவ்வாய்க்கிழமை (04-12-2018) பிற்பகல்-02 மணி முதல் 04 மணி வரை தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் இடம்பெறும். இந்தப் பயிற்சி நெறியில் கலந்து கொள்வதற்கு முற்பதிவு அவசியமாகும்.

மேற்படி பயிற்சி தொடர்பான மேலதிக தகவல்களை 0772247635, 0774541042, 0774594283, 0771870580, 0771310771, 0774301925 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியுமென நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

(எஸ்.ரவி-)