ஆபாச உடையணிந்த நடிகைக்கு ஏற்பட்டுள்ள நிலை!

423

ஆபாச உடை அணிந்து சர்வதேச திரைப்பட விழாவிற்கு வருகை தந்த நடிகை ரானியா யூசுப்புக்கு ஐந்து வருட சிறைத் தண்டனை கூட நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பொதுவாக சினிமா சம்பந்தப்பட்ட விழாக்களுக்கு வரும் நடிகைகள் மிக கவர்ச்சியாகத் தான் உடை அணிந்து வருவார்கள்.அது எல்லா நாட்டிலும் காணப்படும் ஒரு நடைமுறை.

அதிலும்,சில நடிகைகள் அணிந்து வரும் உடைகள் மிக மோசமாக பார்ப்போரை முகம் சுளிக்க வைக்கும் வகையிலிருக்கும். அதற்காகச சிலர் விமர்சனங்கள் கூட செய்வார்கள்.

ஆனால்,எகிப்தில் நடந்த ஒரு சர்வதேச திரைப்பட விழாவுக்கு தொடை தெரியும் படி மெல்லிய உடை அணிந்து வந்த நடிகை ரானியா யூசுப்பை அந்நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர் எகிப்து நாட்டு நடிகை. 44 வயதான ரானியா ‘கெய்ரோ’ சினிமா விருது விழாவிற்கு வரும் போது அணிந்து வந்த உடை ஆபாசமாக உள்ளது என சர்ச்சை எழுந்துள்ளது.

அவர் மீது வழக்குப் பதிவு செய்து எதிர்வரும் ஜனவரி- 12 ஆம் திகதி விசாரணை நடைபெறவுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் இந்த நடிகைக்கு ஐந்து வருட சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளமையும் குறிப்பிடத்தக்கது.