யாழில் அநாமதேய சுவரொட்டிகள்: மகிந்த ஆதரவாளர் காரணமா? (Video)

150

யாழின் பல்வேறிடங்களிலும் நேற்று செவ்வாய்க்கிழமை(04) இரவோடிரவாக அநாமதேய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

குறித்த சுவரொட்டிகள் யாழ்.நகர் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள், திருநெல்வேலி, கோண்டாவில், மருதனார்மடம், சுன்னாகம், மல்லாகம், தெல்லிப்பழை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகம் ஒன்றுகூடும் இடங்களை மையமாக வைத்தே குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

குறித்த சுவரொட்டியில் “வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் டாலர்களுக்காக சமாதானத்தை அழிக்க அனுமதிக்கப் போகிறோமா?” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை,மேற்படி சுவரொட்டிகள் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்டிருக்கலாமெனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:- எஸ்.ரவி-)