யாழ்.சங்கானை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற உயிர் காக்கும் பணி (Photos)

145

சங்கானை பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்த குருதிக் கொடை முகாம் இன்று புதன்கிழமை(05-12-2018) காலை-09 மணி முதல் பிற்பகல்-02.45 ,மணி வரை யாழ். சங்கானை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

சங்கானை பிரதேச செயலர் திருமதி- பொன்னம்பலம் பிறேமினி தலைமையில் நடைபெற்ற குறித்த குருதிக் கொடை முகாமில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நடமாடும் இரத்த வங்கிப் பிரிவினரும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நடமாடும் இரத்த வங்கிப் பிரிவினரும் இணைந்து இரத்தம் பெற்றுக் கொண்டனர்.

மேற்படி குருதிக் கொடை முகாமில் மூன்று பெண்கள் உட்பட 36 வரையான பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சங்கானை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என 36 பேர் வரையானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்தம் வழங்கியதாகத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின்இரத்த வங்கிப் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி ம. பிரதீபன் தெரிவித்தார்.

இதேவேளை,கடந்த-2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்போதைய சங்கானை பிரதேச செயலக நலன்புரிச் சங்கத் தலைவராகவிருந்த து.சுபேஸ் சங்கானையின் முன்னாள் பிரதேச செயலரான ஆ.சோதிநாதனின் ஊக்குவிப்புடன் சங்கானை பிரதேச செயலகத்தில் குருதிக் கொடை முகாமை ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிலையில் இந்த வருடம் சங்கானை பிரதேச செயலக நலன்புரிச் சங்கம் ஆறாவது தடவையாக குருதிக் கொடை முகாம் ஏற்பாடு செய்து நடாத்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

{செய்தித் தொகுப்பு:-செ.ரவிசாந்-}