மரண பசியில் 16 இலட்சம் ரூபாவை தின்று தீர்த்த ஆடு! (Photo)

128

இலட்சக்கணக்கான ரூபா பணத்தை ஆடொன்று தின்று தீர்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய செர்பியாவின் அரன்ஜெலோவாக் அருகேயுள்ள கிராமம் ரனிலோவிக். இங்கு சிமிக் இனக் குடும்பமொன்று விவசாயம் செய்து வருகின்றது. இவர்கள் புதிதாக பத்து ஹெக்டேர் நிலத்தை வாங்கி தங்கள் குடும்ப விவசாயத்தை விரிவாக்கத் திட்டமிட்டிருந்தனர்.

எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருந்தது.இந் நிலையில் நிலம் வாங்குவது தொடர்பாக விற்பனையாளரைச் சந்திக்க குடும்பத்துடன் வெளியில் சென்றுள்ளனர். அப்போது நிலம் வாங்கத் தேவையான பணத்தை டேபிளில் வைத்து விட்டுக் கதவை மூடாமல் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் அவர்களது நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடொன்று வீட்டுக்குள் நுழைந்துள்ளது. அங்கு டேபிளிலிருந்த பணத்தைக் கண்டது. கடுமையான பசியிலிருந்த ஆடு பணக் கட்டுகளைக் கடித்துத் தின்றுள்ளது.

வீடு திரும்பிய விவசாயக் குடும்பத்தினர் பணத்தின் எஞ்சிய துண்டுகள் கீழே இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் வெளியில் வந்து சோதித்த போது ஆடொன்றின் வாயில் சில ரூபாய் நோட்டுக்கள் இருந்துள்ளன.

இதன்மூலம் ஒட்டுமொத்த 16 இலட்சம் ரூபா பணத்தையும், ஆடு தின்று தீர்த்துள்ளதையும் அறிந்தனர். இதனால், அந்தக் குடும்பம் பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் மூழ்கியுள்ளனர்.