மகிந்த பாரிய முட்டாள் தனம் செய்து விட்டார்!: சட்ட நிபுணர் கோமின் தயாசிறி

40

மைத்திரிபால சிறிசேன ஒக்ரோபர்-26 ஆம் திகதி வழங்கிய பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டதன் மூலம் மகிந்த ராஜபக்ச பாரிய முட்டாள்தனமான காரியத்தைச் செய்து விட்டாரென மகிந்த ராஜபக்ச விசுவாசியான சட்டநிபுணர் கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு மகிந்த ராஜபக்சவுக்கு யார் ஆலோசனை கூறினார்கள்? என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

மகிந்தவின் சட்டவாளராகவிருந்த போது எனது ஆலோசனைகளை அவர் சரியாக நடைமுறைப்படுத்தி வந்தார்.தற்போது நடக்கும் அரசியல் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவையடுத்துத் தற்போது நாட்டில் பிரதமரும், அமைச்சரவையும் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நாடு இப்போது மிகவும் மோசமான உறுதியற்ற நிலையில் காணப்படுகின்றது. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியே தற்போது மிகவும் சரியான முடிவை எடுக்க வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலுக்குச் செல்வதற்கு அரசியலமைப்பில் வழியில்லை. ஆனால், ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதற்கு சட்ட வழிமுறையுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.