இவர்களுக்கு உத்தரவிட ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடையாது!

42

பிரதமர் மற்றும் அமைச்சரவை என்பன இல்லாத சூழ்நிலையில் தனது அதிகாரத்தின் கீழுள்ள அமைச்சுக்களின் செயலர்களுக்கு உத்தரவிடுவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடையாது என முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று(05) உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

தனக்குக் கீழுள்ள அமைச்சுக்களின் செயலர்களுக்கு மட்டுமே ஜனாதிபதியால் தற்போது உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியும்.

ஏனைய அமைச்சுக்களின் செயலர்களுடன் அவர் கூட்டங்களை நடத்துவதோ அவர்களுக்கு உத்தரவிடுவதோ அரசியலமைப்பு மீறலாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.