இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக வரும் பிரேரணை!: திருப்பம் ஏற்படுமா?

148

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நம்பிக்கைத் தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும்-12 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது ஐக்கிய தேசிய கட்சி குறித்த பிரேரணையைக் கொண்டு வந்து நிறைவேற்றவுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக கூறிவரும் நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி மேற்கண்ட முடிவை எடுத்துள்ளதாகத் தெரிய வருகின்றது.

இதேவேளை, இதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் நம்பிக்கைத் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டதில்லை. ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக நம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அது இலங்கை வரலாற்றில் பதிவாகும் முதல் நிகழ்வாக அமையும் என்பதும் பைசேட அம்சமாகும்.