பதவியிழந்த அமைச்சர்களுடன் இரணைமடுவில் ஜனாதிபதி! (Photos)

168

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2000 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் புனரமைப்புச் செய்யப்பட்ட கிளிநொச்சி – இரணைமடுக் குளத்தின் வான் கதவொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வெள்ளிக்கிழமை(07) சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்துள்ளார்.

34 அடி உயரத்துக்கு நீரைத் தேக்கும் வசதி கொண்டிருந்த இரணைமடுக் குளம் தற்போது புனரமைக்கப்பட்டு 36 அடி உயரத்துக்கு நீரைத் தேக்கும் வகையில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.

புனரமைக்கப்பட்ட இரணைமடுக் குளத்தில் முதன்முறையாக நேற்று நள்ளிரவு நீர் 36 அடி உயர கொள்ளளவை எட்டியிருந்தது.

இந்த நிலையில் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புனரமைக்கப்பட்ட குளத்தின் வான் கதவைத் திறந்து வைத்ததுடன் அங்கு நிறுவப்பட்டிருந்த நினைவுக்கல்லையும் திறந்து வைத்தார்.

இரணைமடுக் குளத்தின் நீர் மட்டம் கொள்ளளவை விட ஒரு அங்குலமே அதிகமாகவிருந்தமையால் அரை அங்குலத்துக்கே ஜனாதிபதியால் வான்கதவொன்று மாத்திரம் திறந்து விடப்பட்டது.

இந்த நிகழ்வில் நீதிமன்றத்தின் உத்தரவினால் பதவியிழந்த அமைச்சர்களான சரத் அமுனுகம, மகிந்த சமரசிங்க, நிமல் சிறிபால டி சில்வா, சி.பி.ரத்நாயக்க, அங்கஜன் இராமநாதன் உள்ளிட்டவர்களுடன் வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே மற்றும் அண்மையில் பதவியிழந்த அமைச்சர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.