அன்று வெடிகுண்டு: இன்று விதை பந்து! (Photos)

489

இலங்கை விமானப் படையினர் இன்று வெள்ளிக்கிழமை(13-12-2018) உலங்கு வானுர்தி மூலம் விதைபந்துகள் வீசும் பணிகளை சிங்களப் பிரதேசமான நொச்சியாகமவில் முதன்முறையாக ஆரம்பித்துள்ளனர்.

கடந்த-2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் தமிழ்மக்கள் மீது குண்டுவீசித் தாக்குதல் நடாத்திய உலங்கு வானுர்தி தற்போது விதைபந்து வீசும் பணிகளை முதன்முறையாக முன்னெடுத்துள்ளன. Mi-17 ரக உலங்கு வானுர்தியே குறித்த பணிகளில் ஈடுபட்டிருந்தது.

மரங்களின் விதைகள் பசளை சேர்ந்த மண்ணுடன் சேர்க்கப்பட்டே இவ்வாறான விதைபந்துகள் தயாரிக்கப்படுகின்றது.

விதைபந்து வீச்சின் மூலம் மரங்கள் உருவாக்கப்படுவது செயற்கையான காடுருவாக்கத்திற்கும், அழிந்து போன காடுகளை மீள உருவாக்குவதற்கும் துணை புரிகின்றது.

இதேவேளை,தமிழ்நாட்டில் பசுமை இயக்கங்கள், பொது அமைப்புக்கள் மற்றும் தன்னார்வலர்களின் முயற்சியினால் விதைபந்து வீசும் பணிகள் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.