குழந்தைகளை மகிழ்விக்க கிறிஸ்மஸ் தாத்தாவாக மாறிய சச்சின் டெண்டுல்கர்! (Video)

223

உலகம் முழுவதும் நேற்று(25) கிறிஸ்மஸ் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கிறிஸ்மஸ் தினம் என்றாலே சாண்டா கிளாஸ் தான் அனைவருக்கும் நினைவுக்கு வருவார். அவர் குழந்தைகளைச் சந்தித்துப் பரிசுப் பொருட்கள் அளித்து மகிழ்விப்பார்.

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கிறிஸ்மஸ் தினத்தையொட்டி சாண்டா கிளாஸ் வேடமிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை தனது டுவிட்டரிலும் பதிவிட்டுள்ளார்.

அதில், சாண்டா கிளாஸ் சச்சின் நான் அஷ்ராய் குழந்தைகள் நல மையத்திற்கு செல்வதாக கூறுகிறார். பின்னர் காரில் பயணித்து குழந்தைகள் மையத்திற்குச் செல்கின்றார்.

அங்கு ஏராளமான குழந்தைகள் காணப்படுகின்றனர். அவர்களுடன் சச்சின் கிரிக்கெட் விளையாடினார். பின்னர் சிறுவர்,சிறுமியர்களுடன் நடனமாடுகிறார்.

இதனையடுத்து அனைவருக்கும் ஏராளமான பரிசுகளை வாரி வழங்குகிறார்.இதனால், அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றனர்.

இறுதியாக இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் என்று கூறி சச்சின் டெண்டுல்கர் அங்கிருந்து விடை பெறுகின்றார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.