2018 இற்கு குட்பை சொல்லும் கூகுள் (Video)

புத்தாண்டு முன் இரவைக் கொண்டாடும் வகையில் ஒரு புதிய அனிமேஷன் டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது.

இதில் இரண்டு யானைக் குட்டிகள் பந்தை தூக்கி போட்டு விளையாடியபடி 12 மணி ஆகி 2019 ஆம் ஆண்டு பிறக்கக் காத்துக்கொண்டிருக்கின்றன. இது குழந்தைகளை அதிகம் கவர்ந்துள்ளது.

கடந்த செப்ரெம்பர்-04 ஆம் திகதி கூகுள் தனது 20 ஆவது பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டடியது.

1998 ஆம் ஆண்டு செப்ரெம்பர்-04 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கூகுள் தளத்தை தற்போது உலகம் முழுவதும் சிறுவர்முதல் முதியவர் வரை அனைத்து வயதினரும் பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் 2019 புத்தாண்டு பிறக்கவிருப்பதை முன்னிட்டு கூகுளின் கடந்த கால டூடுல்கலெக்‌ஷன்கள் வெளியிடப்பட்டன. இது இணையத்தில் வைரலாகி வருகிறது.