இந்திய கிரிக்கெட் அணிக்கு அவுஸ்திரேலிய பிரதமர் அளித்த புத்தாண்டு விருந்து (Video)

159

அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு அவுஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மாரிசன் தனது வீட்டில் புத்தாண்டு விருந்தளித்துள்ளார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய அணி அவுஸ்திரேலியா அணியுடன் டெஸ்ட், டி-20, ஒருநாள் கிரிக்கெட் தொடா்களில் பங்கேற்று விளையாடி வருகின்றது.

இரு அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நாளை-03 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

இந்நிலையில் அவுஸ்திரேலியா பிரதமா் ஸ்காட் மாரிசன் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணி வீரா்களுக்குத் தனது வீட்டில் நேற்றைய தினம்(01) புத்தாண்டு விருந்தளித்துள்ளாா்.

இந்த விருந்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தலைமையில் அனைத்து வீரா்களும், அணி ஊழியா்களும் கலந்து கொண்டனா்.

அத்துடன் அவுஸ்திரேலியா அணி வீரா்கள் தங்களது பாரம்பரிய நீல நிற உடையுடன் குறித்த விருந்து நிகழ்வில் பங்கேற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.