இலங்கையில் சோள அறுவடை அதிகரிப்பு (Photos)

230

கடந்த ஆண்டில் நாட்டின் மொத்த சோள அறுவடை 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 61 வீதத்தால் அதிகரித்துள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் விவசாயத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடந்த-2018 ஆம் ஆண்டில் சோள அறுவடை மூன்று இலட்சம் மெட்ரிக் தொன் எனக் கணிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு நாட்டில் பாரிய வரட்சி நிலவிய போதிலும் சோள அறுவடை அதிகரித்திருந்தது எனவும் விவசாயத் திணைக்களம் மேலும் சுட்டிக் காட்டியுள்ளது.

இதேவேளை, இம்முறை பெரும்போகத்தில் 250,000 ஏக்கர் நிலப்பரப்பில் சோள உற்பத்தியை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் தேவையில் 50 வீதத்தைப் பூர்த்தி செய்வதே இதன் நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.