யாழ். ஏழாலை களபாவோடை வசந்த நாகபூசணி அம்பாளுக்கு நாளை கொடியேற்றம் (Video)

220

யாழ்.வலிகாமத்தில் பிரசித்திபெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் ஏழாலை தெற்கு களபாவோடை வசந்த நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை வெள்ளிக்கிழமை(11) முற்பகல்-10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ச்சியாக பத்துத் தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும்- 17 ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல்-10 மணிக்கு வேட்டைத் திருவிழாவும், எதிர்வரும்-18 ஆம் திகதி முற்பகல்-10 மணிக்கு சப்பறத் திருவிழாவும், 19 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல்-10 மணிக்கு தேர்த் திருவிழாவும், மறுநாள் 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தைப்பூரணை தினத்தன்று முற்பகல்-10 மணிக்கு “ஸ்ரீ வசந்த நாக புஷ்கரணி” தீர்த்தத் தடாகத்தில் தீர்த்தோற்சவமும் இடம்பெறும்.

இவ்வாலய மஹோற்சவ காலப் பகுதியில் விசேட உற்சவங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் காலை-07 மணிக்கு அபிஷேகமும், காலை-09 மணிக்கு மூலஸ்தானப் பூஜையும், காலை-09.30 மணிக்கு சொற்பொழிவு நிகழ்வும், 09.45 மணிக்கு வசந்தமண்டபப் பூஜையும்,முற்பகல்-11.30 மணிக்கு அன்னதானமும் இடம்பெறும்.

இதேவேளை, ஆலய வருடாந்த மஹோற்சவத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் இன்றைய தினம்(10) பூர்த்தி செய்யப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

{செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:- செ-ரவிசாந்-}