வர்த்தக செய்கையாகிறது கொடித்தோடை செய்கை!

193

கொடித்தோடை செய்கையை வர்த்தக செய்கையாக விஸ்தரிப்பதற்கு விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய மொனராகலை மாவட்டத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் கொடித்தோடை செய்கையை முன்னெடுக்கப்படவுள்ளது.

மேற்படி திட்டத்தையொட்டி செய்கையாளர்களுக்கு 20 ஆயிரம் கொடித் தோடைக் கன்றுகளை இலவசமாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக விவசாயத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.