வெளிநாடுகளுக்கு செல்லும் ஆண்கள் எண்ணிக்கையில் இப்படியொரு மாற்றமா?

447

தொழிலுக்காக வௌிநாடுகளுக்கு செல்லும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வௌிநாடுகளுக்குப் பணிப்பெண்கள் செல்வதில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டுப் பணிப்பெண்களின் வீதம் 31.7 வீதத்தால் குறைவடைந்துள்ளது.

எனினும்,2018 ஆம் ஆண்டில் 2,11,502 இலங்கையர்கள் வௌிநாடுகளுக்குத் தொழிலுக்காகச் சென்றுள்ளனர். அவர்களில் 1,44,531 பேர் ஆண்களாவர்.

இது மொத்த வௌிநாட்டுப் பணியாளர்களில் 68.3 வீதமாகப் பதிவாகியுள்ளது.

இதேவேளை,கடந்த-2018 ஆம் ஆண்டு 66,971 பெண்கள் மாத்திரமே வௌிநாடுகளுக்குத் தொழிலுக்காக சென்றுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் சுட்டிக் காட்டியுள்ளது.