விஸ்வாசம் பார்க்க பணம் கேட்ட மகன்: மறுத்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை!! (Photos)

விஸ்வாசம் திரைப்படம் பார்க்கத் தந்தை பணம் தராத காரணத்தால் தூங்கிக் கொண்டிருந்த தந்தை மீது பெற்றோல் ஊற்றி மகன் எரிக்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் அஜித்குமார். தல அஜித்தின் தீவிர ரசிகரான இவர் விஸ்வாசம் படம் பார்க்க பாண்டியனிடம் பணம் கேட்டுள்ளார்.

இதற்கு அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் முதல் நாள், முதல் ஷோ பார்க்க முடியாத விரக்தியில் இருந்த அஜித்குமார், பாண்டியன் தூங்கிக்கொண்டிருந்ததை அறிந்து அவரது உடலில் பெற்றோலை ஊற்றித் தீ வைத்துள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த பாண்டியனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அடுக்கம்பாறையிலுள்ள அரசு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

குறித்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்றைய தினம்(10) உலகம் முழுவதும் வெளியாகியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.