பிரவசத்தில் பிஞ்சுக் குழந்தைக்கு நடந்த கொடூரம்!

149

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பிரபல அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது செவிலியர் குழந்தையை வேகமாக இழுத்ததால் பிஞ்சுக் குழந்தை பாதியாக வெளிவந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெல்சல்மார் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் திஷாகன்வார் என்ற கர்பிணிப் பெண் பிரசவத்திற்காக ஜனவரி-06 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரது பிரசவத்தின் போது ஆண் செவிலியரொருவர் தான் பிரசவம் பார்த்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அப்போது குழந்தை வெளியே வரும் வேளையில் வேகமாக அவர் இழுத்தமையால் பிஞ்சுக் குழந்தையின் உடல் பகுதி பாதிபாதியாக வெளியே வந்தது.

இதனைப் பார்த்துப் பதறிய செவிலியர் குழந்தை பிறப்பதிலேயே குறையுள்ளது என கர்ப்பிணியின் கணவரிடம் கூறியுள்ளார்.

இன்னொரு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதும் கர்ப்பிணியைப் பரிசோதித்த வைத்தியர்கள் குழந்தையின் தலைப்பகுதி அவரது வயிற்றுக்குள் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

குறித்த தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ராம்நகர் அரசு வைத்தியசாலைக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டதுடன் ஆண் செவிலியர்கள் அம்ரிட்லால், ஜூன்சார் சிங் ஆகிய இருவரையும் கைது செய்யுமாறும் வலியுறுத்தினர்.

இது தொடர்பில் தகவலறிந்த பொலிஸார் விரைந்து வந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிய வருகின்றது. இப் பிரச்சனை மேலும் பூதாகராகி வருவதால் கூடிய விரைவில் ஆண் செவிலியர்கள் கைதாக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது