யாழ். குப்பிழான் சிவபூமி ஆச்சிரமத்தில் திருவாசக முற்றோதல் (Video)

161

யாழ்.குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தின் வருடாந்த திருவாசக முற்றோதல் நிகழ்வு நாளை சனிக்கிழமை(12.01.2019) இடம்பெறவுள்ளது.

காலை-06 மணிக்கு திருவாசக முற்றோதல் ஆரம்பமாகும். திருவாசக முற்றோதல் நிறைவுபெற்ற பின்னர் நண்பகல்-12 மணிக்கு விசேட பூஜை இடம்பெறும்.

அதனைத் தொடர்ந்து மகேஸ்வரபூஜை( அன்னதானம்) இடம்பெறும்.

மேற்படி திருவாசக முற்றோதல் நிகழ்வு தொடர்பாக சிவபூமி ஞான ஆச்சிமப் பொறுப்பாளர் எஸ். சிறிதரன் எமது செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் ஒவ்வொரு வருடமும் திருவாசக முற்றோதல் நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெறுகின்றது.

எங்களுடைய ஆன்மீகத தலைவரும், எங்களை வழிநடாத்துகின்ற குருநாதருமாகிய செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகனின் நெறிப்படுத்தலில் கடந்த ஆறு ஆண்டுகளாக சிவபூமி ஞான ஆச்சிரமம் சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றது.

வாரம் தோறும் சனிக்கிழமைகளில் விசேட பூசையும், கூட்டுப் பிரார்த்தனையும், அன்னதானமும் நடைபெற்று வருகின்றது.

அதுமாத்திரமன்றி கடந்த பல நாட்களாக எமது ஆச்சிரமத்தில் தினம் தோறும் திருமுறை பாராயணமும் நடைபெற்று வருகின்றது.

அடியவர்களது ஒத்துழைப்பினால் எங்களுடைய ஆச்சிரமம் மிகவும் சிறப்பாக இயங்கி வருகின்றது.

அந்த வகையில் நாளைய தினம் இடம்பெறவுள்ள திருவாசக முற்றோதல் நிகழ்வில் ஓதுவார்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

மேற்படி திருவாசக முற்றோதல் நிகழ்வில் ஓதுவார்கள், திருவாசக ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற முடியுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

{சிறப்புத் தொகுப்பு மற்றும் காணொளி:- செ.ரவிசாந்-}