யாழில் சனி, ஞாயிறு மின்தடைப்படவுள்ள பகுதிகள் விபரம்

202

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக நாளை சனிக்கிழமையும்(12),நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும்(13) யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி,நாளை சனிக்கிழமை(12) காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரையும் யாழ். வேலணைச் சாந்தியிலிருந்து துறையூர் வரை, மடத்துவெளி வல்லான், ஆலடிச் சந்தி, புங்குடுதீவு, இறுப்பிட்டி, குறிகட்டுவான், புங்குடுதீவு கடற்படை முகாம், மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான், வேலணை ஒரு பகுதி, சோளாவத்தை, மண்கும்பான் தேசிய நீர் வழங்கல் வடிகால் சபை, மண்டைதீவு இலங்கை கடற்படை முகாம், மண்கும்பான் கடற்படை முகாம், விக்னேஸ்வரா வீதி ஆகிய பகுதிகளிலும்,

நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை(13) காலை- 08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரையும் யாழின் வசாவிளான் ஒரு பகுதி, பலாலி ஒரு பகுதி, நாவாந்துறை, பொம்மைவெளி, காக்கைதீவு, சங்கானை வீதி(அச்சுவேலி) ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

(எஸ்.ரவி-)