நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுகிறது நிபுணர் குழு அறிக்கை!

115

புதிய அரசியலமைப்பு வரைவுக்கான யோசனைகளை உள்ளடக்கிய நிபுணர் குழுவின் அறிக்கை இன்றைய தினம்(11) அரசியலமைப்புச் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நாடாளுமன்றம் இன்று முற்பகல்- 10.30 மணியளவில் அரசியலமைப்பு சபையாக கூடவுள்ளது.

புதிய அரசியலமைப்பு வரைவுக்கான யோசனைகளை உள்ளடக்கிய நிபுணர் குழுவின் அறிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது சபையில் சமர்ப்பிப்பார்.

அரசியல் கட்சிகளின் கருத்துக்களை உள்ளடக்கிய இந்த அறிக்கை மூன்று மொழிகளிலும் இடம்பெற்றிருக்கும்.

சபாநாயகர் கரு ஜெயசூரிய வெளிநாடு சென்றுள்ளமையால் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் அரசியலமைப்புச் சபையின் கூட்டம் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல்- 12.30 மணிவரை அரசியலமைப்புச் சபையின் கூட்டம் இடம்பெறும்.