இன்றைய நாள் உங்களுக்கு எப்படித் தெரியுமா?- (11.01.2019)

138

இன்று மாணவர்கள் அவசரப்படாமல் நிதானமாக மனதில் பதியும் படியாக பாடங்களைப் படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். திறமை வெளிப்படும். அடுத்தவர் யாரும் குறைகூறக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பீர்கள். எதிலும் இலாபம் கிடைக்கும். காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம்:- வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்:- 3, 9

இன்று உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண்கவலை நீங்கும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரம் விருத்தியடையும். தடைப்பட்ட நிதி உதவி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்:- நீலம்
அதிர்ஷ்ட எண்கள்:- 2, 5, 9

இன்று ஏற்கனவே வரவேண்டிய நிலையில் வராமல் நின்ற ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வேலைபளு வீண் அலைச்சல் குறையும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். புதிய வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலர் பழைய வீட்டை புதுப்பிப்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்:- நீலம், வெளிர் பிறவுண்
அதிர்ஷ்ட எண்கள்:- 2, 6

இன்று வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகள் சந்தோஷமாக காணப்படுவார்கள். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடலாம். மனக் குழப்பம் தீரும். தைரியமாக எந்தவொரு காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்:- மஞ்சள், வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்:- 3, 7

இன்று மாணவர்கள் மிகவும் கவனமாகப் பாடங்களைப் படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சி செய்வீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். எதற்கும் கலக்கமோ, அதிர்ச்சியோ அடைய வேண்டாம். வீண்செலவு குறையும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி நிம்மதி உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்:- சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்:- 5, 9

இன்று வர வேண்டிய பணம் வந்து சேரும். சாமர்த்தியமான பேச்சினால் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அலைச்சல் ஏற்படலாம். அடிக்கடி கனவுகள் வரக்கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். `
அதிர்ஷ்ட நிறம்:- வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்:- 6, 9

இன்று புதிய ஆர்டர்கள் வருவது அதிகரிக்கும். உத்தியோகத்திலிருப்பவர்கள் குறித்த நேரத்தில் பணிகளை முடித்து மனநிறைவு அடைவார்கள். குடும்பத்திலிருந்த குழப்பங்கள் நீங்கி சுமுகமான நிலை காணப்படும். கணவன்- மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்:- பச்சை
அதிர்ஷ்ட எண்கள்:- 5, 7

இன்று உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். திறமையான பேச்சின் மூலம் காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். பயணங்கள் மூலம் அலைச்சல் உண்டாகலாம். மாணவர்கள் பாடங்கள் படிப்பது எதிர்பார்த்தது போல் எளிமையாக இல்லாமல் கடினமாகவிருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்:- ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்:- 1, 3, 9

இன்று பணவிடயத்தில் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாகவிருந்து வந்த காரியம் சாதகமாக நடந்து முடியும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தந்தை மூலம் செலவு உண்டாகலாம். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.
அதிர்ஷ்ட நிறம்:- வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்:- 2, 7

இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வேலைப் பளு குறைந்து வீண் அலைச்சலும் குறையும். ஆனால் பணியை பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்:- பச்சை, வெளிர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்:- 1, 3

இன்று குடும்பத்தில் திடீர் பிரச்சினை தலைதூக்கிப் பின்னர் சரியாகும். கணவன்- மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளால் செலவும் ஏற்படும். உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறம்:- வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்:- 5, 6

இன்று தடைப்பட்ட காரியங்கள் தடைநீங்கி சாதகமாக நடக்கும். பணவரத்துத் திருப்திகரமாகவிருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். ஆர்வமுடன் பாடங்களைப் படிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்:- பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்:- 5, 9